வசூலில் யாரை யார் முந்தினார்கள்?

வசூலில் யாரை யார் முந்தினார்கள்?

வசூலில் யாரை யார் முந்தினார்கள்?

கடந்த வாரம் வெளியான படங்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் மகாமுனி ஆகிய இரண்டு படங்களும் அமைந்தன. இரு படங்களின் கதைக்களமும் வெவ்வேறு. ரசிகர்கள் மகாமுனி படத்தை க்ளாஸாகவும், சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை மாஸாகவும் எடுத்துக் கொண்டார்கள். ரசிகர்களின் ஆதரவைப் போலவே வசூலிலும் இரு படங்களும் கிட்டத்திட்ட ஒரே நிலையை எட்டியுள்ளது. முதலில் சென்னையில் உள்ள கலெக்‌ஷன் ரிப்போர்ட் மட்டும் வந்துள்ளது. சென்னையில் மூன்று நாட்களில் மகாமுனி படம் 82 லட்சமும், சிவப்பு மஞ்சள் பச்சை 80 லட்சமும் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இரண்டு படங்களுக்கும் ஆடியன்ஸ் க்ரீன் சிக்னல் காட்டி இருப்பதைத் தான் இவ்வசூல் நிலவரங்கள் காட்டுகின்றன. மேலும் மகாமுனி சி சென்டர்களில் போதிய வசூலை ஈட்டவில்லை என்ற தகவலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up