விடலைகளை அணுக வேண்டிய விதங்கள் பல உண்டு. வாசிக்க வேண்டிய பதிவு

விடலைகளை அணுக வேண்டிய விதங்கள் பல உண்டு. வாசிக்க வேண்டிய பதிவு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சன், அபிராமி என்ற பள்ளி மாணவ மாணவியர் இருவரும் கூட்டாக தற்கொலை..

விஷயம் என்னவென்றால் இருவருக்குமிடையில் காதலாம்.. பையன் ப்ளஸ்டூ 18 வயது.. பொண்ணு டென்த், வயது 16..

இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பாம். அதனால் மனமுடைந்து இருவரும் கிணற்றில் விழுந்து தற்கொலை.

இவ்வளவு காலம் பிள்ளைகளை வளர்த்து பறிகொடுத்திருக்கும் அந்த குடும்பங்களை நினைத்தால்..அந்த வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும் மூச்சுக்கு முன்னூறு தரம் செல்லமாய் அழைத்த பிள்ளைகள் இன்றில்லை..

பரஸ்பர பாலின ஈர்ப்பை இளவயதில் தவிர்க்கவே முடியாது..அப்படி இல்லையென்றால்தான கோளாறு.. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், நீ என் பொண்டாட்டிடி என்று சொல்லி வாடிபோடி என்று பையன்கள் உரிமை கொண்டாடுவர்கள்.

ஆனால் பொண்டாட்டியை வைத்து குடும்பம் நடத்த என்னென்ன தேவை என்று அப்பன் காசில்தால் எல்லாவற்றையுமே செய்யும், காமடி கணவன் கம் காதலனுக்கு தெரியாது..

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முரட்டுத்தனமாய் இந்த விடலைகளிடம் பெற்றோர் எதிர்ப்பை தெரிவிக்கக்கூடாது..

சரி தம்பி என் பொண்ணை இன்னைக்கே கட்டிக்கோ, போய் ரிஜிஸ்ட்டர் ஆபிசில் டீடெயில் கேட்டுவா என்று சொல்ல வேண்டும்.. வரும்போது உங்கப்பன் கிட்ட காசு வாங்காம. உன்னோட சம்பாதியத்தில் அரை பவுன் தாலியோட வந்துடு. என சிரிக்காமல் சீரியஸாகவே சொல்லவேண்டும்.

அப்புறம் மாப்பிள்ளை வீட்டார் என்ற முறையில், கல்யாண மண்டபம், துணி மணி, மூணு வேளை விருந்து, பாட்டுக்கச்சேரி, பத்திரிகை அடிக்கன்னு ஒரு செலவு பட்டியலை குடுக்கணும்

அப்புறம் கல்யாணம் முடிஞ்ச கையோட குடும்பம் நடத்த எங்கே வீடு பார்த்திருக்கேன்னு சொல்லு தம்பி..

உங்க அப்பா அம்மாவுக்கு தெரியாம நாங்களே கல்யாணம் பண்ணிவைக்கிறோம் தம்பி

என்று நிஜ உலகத்திற்கு அவனை படிப்படியாக அழைக்கவேண்டும்..அப்புறம் முக்கியமான விஷயம் தம்பி, அப்பன் கிட்ட வாங்காம சொந்தமா சம்பாதிச்சு கைல காசிருந்தா எங்க வீட்டுக்கு நாலு கப் காப்பி வாங்கிட்டு வந்து குடுத்துட்டு போ தம்பி..

அடுத்த தடவை வரும்போது உன் பிரண்ட்சையெல் லாம் கூட்டிகிட்டு வந்துடு, கல்யாண வேலையெல் லாம் அவங்கதானே பாக்கணும்?

தொல்லை கொடுக்குறு பிசாசுக்கு வேலை குடுத்து எங்கயாவது தொரத்திவிடணும்னா, ஒரு மயிரை குடுத்து, போய் இதை நிமிர்த்திட்டு வான்னு சொல்லி அனுப்பிடணும்.. மேட்டர் ஓவர்..

அதைவிட்டுட்டு, விடலைகிட்ட வீம்பு பேசனோம்னா, ஆஹா நம்ம தெய்வீக காதலையே பிரிக்கப்பாக்கறாங் களேன்னு கண்ட லெவலுக்கு போவும்..

அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஸ்கூல் ஸ்டூடன்ஸ் கார்த்திக்கும் ராதாவும் கல்யாணம் கட்டிக்க ஓடிப்போனத மட்டுந்தான் பாரதிராஜா காட்டுனாரு..

அந்த ஜோடி, ஒரு ரவுடி கும்பல் கிட்ட மாட்டி கதா நாயகி கேப் ரேப்புக்கு ஆளாகி சாவறதும் அதை பார்த்தும் தடுக்கமுடியாம ஹீரோவுக்கு பைத்தியம் பிடிச்சி போறதையும்,

ஹீரோவுக்கு பைத்தியம் பிடிச்சதாலேயே இந்த விட்னசை எதுக்கு வேஸ்டா கொல்லணும்னு ரவுடிங்க விட்டுட்டு போறதும், கொஞ்சநேரத்துல சரக்கு லாரில அடிபட்டு ஹீரோ சாவறதையும் பாரதிராஜா காட்டாம விட்டுட்டாரு..

கடைசி பிரேமில் இரு காட்சிகளையும் ஜாயின் பண்ணா, ஒரு பக்கம் அலங்கோலமா ஹீரோயின் பாடி, இன்னொரு பக்கம் மூளை சிதறி ஹீரோவோட பாடி.

-ஏழுமலை வெங்கடேசன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up