Vijay

Follow
9.8

User Avg

விஜய் அஜித்திற்கு அடுத்த இடத்தில் Mr லோக்கல்

விஜய் அஜித்திற்கு அடுத்த இடத்தில் Mr லோக்கல்

ஒரு படத்தின் ஓப்பனிங் வசூலைப் பொறுத்து தான் அந்தப்படத்தின் நாயகனின் வியாபார எல்லையை நிர்ணயம் செய்வார்கள். வசூலில் தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னர்கள் யாரென்றால் அது விஜய் அஜித் இருவரும் தான். இவர்களுக்கு அடுத்து தான் ரஜினியே இருக்கிறார் என்பது சர்கார்,விஸ்வாசம், பேட்ட வசூல் விபரங்களில் தெரிந்தது. இந்நிலையில் விஜய் அஜித்திற்கு அடுத்து வசூலில் அடித்து ஆடும் ஹீரோ யார் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் என்கிறார்கள். குழந்தைகள் முதல் குடும்பப் பெண்கள் வரை சிவகார்த்திகேயனுக்கு பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. வரும் 17-ம் தேதி வரவிருக்கும் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு காலை காட்சிகளுக்கு டிக்கெட்கள் இப்பவே புக் ஆகிறது. இது விஜய் அஜித் இருவருக்கு மட்டும் தான் சாத்தியம். அதை தற்போது சிவகார்த்திகேயனும் பெற்று வருவதால், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, விஷால், விஜய்சேதுபதி ஆகிய நடிகர்களுக்கு முன்னால் SK தான் இருக்கிறார் என்பது கண்கூடு. ஆக இனி விஜய் அஜித் இருவருக்கும் அடுத்த இடத்தில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பது Mr லோக்கல் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up