Tamil Movie Ads News and Videos Portal

துப்பாக்கி-2 ரசிகர்கள் செய்த அதகளம்


இரண்டு நாட்களாக டிவிட்டர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருப்பது துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான டிவிட்டுகள் தான். விஜய் காஜல் அகர்வால் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவிருப்பதாக சில நாட்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

இதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவியுடன் நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து கூட காஜல் விலகிவிட்டார் என்று கூட கூறப்பட்டது. ஆனால் காஜல் ஆச்சார்யா படத்திலிருந்து விலகவில்லை என்று அவரின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர்களைக் கூட உருவாக்கத் துவங்கிவிட்டனர். துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ்சிவன் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை ஒரு கொலேஜ்ஜாக மாற்றி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதனை அடுத்து தான் துப்பாக்கி 2 உருவாகவிருப்பதாக பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline