Vijay Sethupathi

Follow

‘விஜய் சேதுபதி’-யை புகழ்ந்து தள்ளும் ”நானி”

‘விஜய் சேதுபதி’-யை புகழ்ந்து தள்ளும் ”நானி”

நான் ஈ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய மொழிப்படங்கள் அனைத்திலும் பிரபலமானவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கேங்லீடர்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நானி, ஏன் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள்..? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த நானி, “நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லன் கதாபாத்திரம், குணச்சித்திரக் கதாபாத்திரம், என எல்லா கதாபாத்திரத்திலும் நடிப்பதைப் போல் ஒரு நடிகனாக நானும் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதில் எனக்கு விஜய் சேதுபதி தான் முன்னுதாரணம்..” என்று புகழ்ந்து பேசியுள்ளார். விஜய் சேதுபதி மலையாளத்தில் மார்கோனி மத்தாய், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நாயகனாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up