Vijay Sethupathi

Follow

விஜய்சேதுபதியால் விஜய்யை எதிர்க்க முடியுமா?

விஜய்சேதுபதியால் விஜய்யை எதிர்க்க முடியுமா?

சமீப காலமாகவே ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும் போது வேறு எந்தப்படங்களும் வருவதில்லை. இந்த மூவரின் படங்கள் தான் சில சமயம் மோதும். வேறு யார் படங்களும் வர வாய்ப்பே இல்லை. ஆனால் இன்று ஒரு செய்தி வெளியாகி அசரடித்து வருகிறது. அதாவது தீபாவளி அன்று விஜய் நடித்துள்ள பிகில் படம் வெளியாக இருக்கிறது. அந்தப்படத்தோடு விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் வெளிவர இருப்பதாக செய்தி வந்துள்ளது. தமிழ்சினிமாவில் வசூல் மன்னன் என்று சொல்லப்படுபவர் விஜய். அவர் நடித்தால் சுமாரான படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. மேலும் தியேட்டர்காரகளின் செல்லப்பிள்ளை விஜய். அதனால் விஜய்சேதுபதி படத்திற்கு தியேட்டர்ஸ் கிடைக்குமா? என்ற விவாதம் இப்போதே வலுத்து வருகிறது. சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த சிந்துபாத் படம் துளியளவும் ஓப்பனிங் இல்லாமல் பலத்த நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up