Tamil Movie Ads News and Videos Portal

விஜய் – விஜய் சேதுபதி காட்சிகளை எதிர்பார்க்கும் படக்குழு

‘மாநகரம்’ ‘கைதி’ திரைப்படங்களைத் தொடர்ந்து, தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தினை இயக்கி வருகிறார். ‘மாஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புதியப் படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை ஆகியப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.

தற்போது புது வருடத்தை முன்னிட்டு சில நாட்கள் படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டு, மீண்டும் தற்போது படப்பிடிப்பை தொடங்கியிருக்கின்றனர். கைதி திரைப்படத்திற்காக பேவரைட் இயக்குநர் விருது வாங்கிய லோகேஷ் கனகராஜ் மேடையில் பேசும் போது, “தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருக்கும் காட்சிகளை இனி தான் படமாக்கவிருக்கிறோம். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தும் என்று இப்பொழுதே படக்குழுவினர் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.” என்று கூறியிருக்கிறார்.

Get real time updates directly on you device, subscribe now.