Tamil Movie Ads News and Videos Portal

 சென்ற வாரத்தில் குண்டு துளைத்த படங்கள் எவை?

சென்றவாரம் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தோடு மோதிய மற்ற படங்கள் அனைத்துமே சோடை போயுள்ளன. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடா படம் டோட்டலாக ஜகா வாங்கியுள்ளது. அதற்கான காரணம் அப்படத்தில் திரைக்கதை மிகவும் பலவீனமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. சுந்தர் சி நடிப்பில் இருட்டு படமும் எந்த வெளிச்சமும் இல்லாமல் வெளியேறிவிட்டது. பெரிதாக பில்டப் செய்யப்பட்ட தனுஷுராசி நேயர்களே படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போய்விட்டது. வெறும் ஆர்வக்கோளாரில் எடுப்பட்டப் படமாக அப்படம் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. ஆக சென்றவாரம் வெளியான படங்களில் குண்டு முன் அனைத்துப் படங்களும் காணாமல் போயுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline